பொலீஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 68 இன் பிரகாரம் "பொலீஸ் உத்தியோகத்தர் மதுபான சாலைகளில் , மதுபானம் விற்பனை
செய்யப்படும் என கருதப்படும் கட்டிடங்களிலும் எவ்வித பிடியாணையுமின்றி
நியாயமான காரணத்தின் அடிப்படையில் உட்சென்று விசாரணை செய்யவும்
அவ்விடத்தினை சோதனையிடவும் அதிகாரம் உண்டு."
பொலீஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 69 இன் பிரகாரம் "குடிபோதைக்குள்ளாகி
பொது இடத்தில் விழுந்து கிடத்தல், ஒழுக்கமற்ற விதத்தில் நடந்து கொள்ளல், பிறருக்கு தொல்லை கொடுத்தல்
மற்றும் வீணான சத்தமேற்படுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் குற்றமிழைத்தவர்களாக
கருதப்படுவதுடன் அவர்களை கைது செய்ய பொலீஸாருக்கு அதிகாரம் உண்டு என்பதுடன் நீதவான் நீதிமன்றினால்
அவர்களுக்கு சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் விதிக்கப்படும்."
No comments:
Post a Comment